News May 13, 2024
ஆர்வமாக ஜனநாயக கடமையாற்றும் மக்கள்

தெலங்கானா, ஆந்திரா, பீஹார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் 23.10%, பீஹாரில் 22.54%, ஜம்மு & காஷ்மீரில் 14.94%, ஜார்கண்டில் 27.40%, ம.பி.யில் 32.38%, மகாராஷ்டிராவில் 17.51%, ஒடிஷாவில் 23.28%, தெலங்கானாவில் 24.31%. உ.பி.யில் 27.12% மேற்கு வங்கத்தில் 32.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Similar News
News September 15, 2025
RECIPE: சுவையான ஹெல்தி கம்பு வடை!

கம்பில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கும், புரதம் பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்புக்கு உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கம்பில் வடை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
*கம்பு, உளுந்தம் மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, எள்ளு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வட்டங்களாக தட்டவும்.
*இவற்றை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கம்பு வடை ரெடி. SHARE.
News September 15, 2025
‘தமிழ்நாடு’ அடையாளம் கொடுத்த தலைவன்!

திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றி நிற்க விதை போட்ட பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று. தாய்த்திருநாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்டுவர், மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் கட் அண்ட் ரைட்டாக கூறினார். பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ் உணர்வு இருக்கும் வரை தமிழ்நாடு என்றைக்கும் அண்ணாவை மறக்காது! உங்களுக்கு அண்ணா என்றால் நினைவுக்கு வருவதென்ன?
News September 15, 2025
‘மறப்போம், மன்னிப்போம்’ .. செங்கோட்டையன்

எம்ஜிஆர், ஜெ.,வின் உண்மையான விசுவாசிகள் ஒன்றாக இருந்தால்தான் 2026-ல் அதிமுக வெற்றி பெறும் என்று செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற அண்ணாவின் பொன் எழுத்துகளை நினைவூட்ட விரும்புவதாகவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து புரிய வேண்டியவர்களுக்கு (இபிஎஸ்) புரிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.