News February 28, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு மார்ச் 2 உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
Similar News
News March 8, 2026
‘Women is Worth & Earth’ விஜய்க்கு பார்த்திபன் பதிலடி!

சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு Women என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ‘It’s worth! Worth & Worth Because women is another Earth’ எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று, தவெக மகளிர் தின விழாவில் தனது மனைவி சங்கீதா விவகாரத்தை <<19322295>>Worth இல்லை <<>>என மறைமுகமாக பேசிய விஜய்க்கு இது பதிலடி என நெட்டிசன்கள் SM-ல் கருத்து கூறி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News March 8, 2026
இன்று ஒரு நாள் கொண்டாடி விட்டால் போதுமா..?

இன்று முழுவதும் பெண்களுக்கு வாழ்த்துகள்தான்! ஆனால் சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதா? இன்னும் சில கிராமங்களில் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை தரும் மனப்போக்கு தொடர்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் அரங்கேற போகிறது? வாழ்த்துகளால் அல்ல, சமத்துவத்தால் தான் பெண்கள் தினம் முழுமை பெறும் என்பதை இந்த சமூகம் உணரப்போவது எப்போது?
News March 8, 2026
இன்று பைனல்.. உச்சம் தொட்ட கட்டணம்!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் WC T20I இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி படையெடுத்துள்ள நிலையில், ஹோட்டல் ரூம் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒரு இரவு தங்குவதற்கு ₹18 ஆயிரம் முதல் ₹80 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறதாம். அதே போல முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


