News February 28, 2026

தமிழ்நாட்டின் தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

image

தமிழக தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாம். முன்னதாக, தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக CEC ஞானேஷ்குமார் கூறியிருந்தார். தேர்தல் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டார்.

Similar News

News March 8, 2026

பிரிட்டனின் உதவி தேவையில்லை: டிரம்ப்

image

ஈரானுடனான போரில் பிரிட்டனின் ஆதரவு இல்லாததை எப்போது நினைவு கொள்வேன் என டிரம்ப் கூறியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர், ஒரு காலத்தில் சிறந்த நட்பு நாடான இங்கிலாந்து, இறுதியாக தற்போது 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது; ஆனால் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஈரான் போரில், தற்போது கூட்டு சேரும் நபர்கள் தங்களுக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 8, மாசி 24 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News March 8, 2026

இரண்டு நாளில் கூட்டணி உறுதியாகும்: வீரபாண்டியன்

image

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – சிபிஐ இடையிலான 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், மார்ச் 8,9-ம் தேதிக்குள் தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்படும் என்றார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை என்றும், மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!