News February 28, 2026

புதுச்சேரி: பெண்களுக்கு தடுப்பூசி திட்டம் தொடக்கம்

image

இந்திய அரசின் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 14 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்களுக்கு நாடு முழுவதும் எச்.பி.வி. (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைப் பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் ஆளுநர் கைலாசநாதன் அரசுப் பள்ளி மாணவிகளுக்குத் தடுப்பூசி செலுத்தி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

Similar News

News March 1, 2026

புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

image

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது இந்தியா முழுவதும் உயர்தரமான உட்கட்டமைப்பை உருவாக்க, மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

News March 1, 2026

புதுச்சேரி: பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

image

புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், விழா மேடையிலேயே பிரதமர் மோடியை சந்தித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரி நிர்வாக அதிகாரங்களில் பல கட்டுப்பாடுகள் இருப்பதால், மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த மாநில அந்தஸ்து அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

News March 1, 2026

புதுச்சேரி: மோடி வருகையையொட்டி காங்கிரஸ் தலைவி கைது

image

பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கருப்புக்கொடி காட்டப்போவதாக வீடியோ வெளியிட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதலியார்பேட்டை காவல்துறையினர் இன்று காலை அவரது இல்லத்திற்குச் சென்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!