News February 28, 2026
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
Similar News
News March 1, 2026
திருச்சி: திமுகவின் மாநில மாநாடு பணி தீவிரம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு மார்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 1, 2026
திருச்சி: லஞ்சம் பெற்ற வழக்கில் மின் பொறியாளர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி மின் பொறியாளர் ராஜு விவசாய நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.3000 லஞ்சம் கேட்க, அதைக் கொடுக்க விரும்பாத, கோம்பையைச் சேர்ந்த முத்து என்பவர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச கண்காணிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில், நேற்று ராஜு கையூட்டு பெற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
News February 28, 2026
துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் தரையிறக்கம்

திருச்சியில் இருந்து 145 பயணிகளுடன் இன்று பிற்பகல் 1.12 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஈரான் நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக திருப்பி அனுப்ப கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


