News May 13, 2024
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம். மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Similar News
News March 19, 2026
விடுமுறை .. சற்றுமுன் புதிய அறிவிப்பு வெளியானது

தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் அரசு & தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறையை ECI வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை விடுமுறை அளிக்கவில்லையென்றால் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.
News March 19, 2026
சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்: நாதக வாக்குறுதி

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும். *தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி. *மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை. *நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் உள்ளிட்ட <<19423818>>பல வாக்குறுதிகள்<<>> இடம் பெற்றுள்ளன.
News March 19, 2026
சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணியா?

சசிகலாவுடன் இணைந்து ராமதாஸ் தரப்பு தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டார். திமுக கூட்டணியில் இணையவும் ஆதரவாளர்கள் விரும்பாததால், தவெகவுடன் கூட்டணி வைக்க பலர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுடன் இணைந்து வட மாவட்டங்களில் 40 இடங்களில் நிற்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளாராம்.


