News February 28, 2026
MGR, ஜெ. படத்தையும் EPS நீக்குவார்: செல்வப்பெருந்தகை

மதுரையில் நாளை PM மோடி பங்கேற்கும் NDA கூட்டணி பொதுக்கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த <<19263626>>பெரியார் படம் நீக்கப்பட்டது<<>> சர்ச்சையானது. இந்நிலையில் கூட்டணிக்காக பெரியார் படத்தை மட்டுமல்ல MGR, ஜெ., படத்தையும் கூட EPS நீக்குவார் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அதிமுக என்பது பாஜகவின் கிளை கழகம் என்றும், தனது தலைவர்களான மோடி, அமித்ஷா என்ன சொல்கிறார்களோ அதனை EPS நிறைவேற்றுவார் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News March 1, 2026
கடந்தாண்டை விட 8.1% எகிறிய ஜிஎஸ்டி வசூல்!

பிப்ரவரி மாத GST வசூல் 1.83 லட்சம் கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தை விட 8.1% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டு மாதம் என்பதால் மார்ச் மாதத்தில் வரி வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரா ₹16,581 கோடி வசூலித்துள்ள நிலையில், தமிழகம் ₹6,811 கோடி GST வசூலித்துள்ளது.
News March 1, 2026
மகளிர் வங்கிக் கணக்கில் ₹25,000.. FACTCHECK

‘Women Work from Home Scheme’ திட்டத்தின்கீழ் மகளிருக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கி, மாதம் ₹25,000 சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இது பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையை அறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 1, 2026
பெண்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரும் திட்டம் பற்றி தெரியுமா?

விவசாய கூலிகளாக இருக்கும் SC, ST வகுப்பை சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’. இதன்கீழ் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்கலாம். இதற்கு தேவையான கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. இதற்கு ஆன்லைனில் <


