News February 28, 2026
குழந்தைகளின் ரத்தத்தை குடிக்கும் அரக்கன் (போர்)

போரை தீர்மானிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க, அதன் கோர முகத்தை நேரடியாக சந்திப்பது என்னவோ அப்பாவி மக்கள்தான். 2025-ல் மட்டும் உலகளவில் நடந்த போர்களில் சுமார் 2,40,000 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சோகம் இத்துடன் நின்றுவிடவில்லை. 2024-ல் மட்டும் சுமார் 47.3 கோடி குழந்தைகள் போரினால் வறுமை, உடல் & மனரீதியிலான பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். இப்போ சொல்லுங்க.. போர் அவசியமா?
Similar News
News March 1, 2026
PM KISAN திட்ட தவணை ₹2,000.. வந்தது UPDATE

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை (₹2,000) எப்போது கிடைக்கும் என்பதே நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன்பே (மார்ச் 4) பணம் வரவு வைக்கப்படும் என ஏற்கெனவே தகவல் வெளியானது. ஆனால், தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எனினும், மார்ச்சில் ₹2,000 கிடைக்க வாய்ப்புள்ளதாம். அதற்குள் KYC அப்டேட் உள்ளிட்டவற்றை நிறைவு செய்யுங்கள் விவசாய பெருமக்களே!
News March 1, 2026
திமுகவின் இருண்ட ஆட்சி அகற்றப்படும்: TTV தினகரன்

சித்திரை திருவிழா போல மாபெரும் பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்று இருப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை NDA கூட்டத்தில் பேசிய அவர், MGR நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை சுட்டிக்காட்டி, திமுகவின் இருண்ட ஆட்சியை மோடி தலைமையிலான NDA கூட்டணி வீழ்த்தும் என கூறியுள்ளார். PM மோடிக்கு EPS உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் துணை இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
News March 1, 2026
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தீவிர தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்திலும் அமெரிக்காவின் தாக்குதலில் பல உலக தலைவர்களும் தளபதிகளும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை காண வலதுபக்கம் Swipe செய்து பாருங்கள். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?


