News May 13, 2024
மயிலாடுதுறை: மழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 21, 2026
மயிலாடுதுறை: கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 21, 2026
மயிலாடுதுறை: B.E போதும்- அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 21, 2026
மயிலாடுதுறை: தொழிலாளர்கள் 39 பேர் கைது

மயிலாடுதுறை மண்டல நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மணடல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று டிஎன்சிஎஸ்சி சுமைதூக்குவோர் பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.


