News May 13, 2024
மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது மனைவி சுரேகா உடன் வந்த நடிகர் சிரஞ்சீவி, ஜனநாயக கடமையாற்றினார். ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் ஆஸ்கர் புகழ் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வாக்களித்தார். அதேபோல, ஆந்திராவின் மங்களகிரியில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனது வாக்கை செலுத்தினார்.
Similar News
News August 22, 2025
தீபாவளிக்கு பிரதீப்பின் டபுள் ட்ரீட்!

சென்செஷன் ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் LIK படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ‘Dude’ படமும் தீபாவளிக்கு (அக்.20-ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள்கள் இடைவெளியில் 2 படங்கள் வெளிவருவது கலெக்ஷனை குறைக்கும் என சினிமா டிராக்கர்கள் தெரிவிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News August 22, 2025
விஜய்யின் பலம் என்ன? அண்ணாமலை கேள்வி

கூட்டமாக கூடுவோரை வாக்குகளாக மாற்ற தவெகவுக்கு சித்தாந்தம் வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தனது பலம் குறித்து ஏதும் பேசவில்லை என சாடியுள்ளார். பழங்கதைகளை கூறாமல் 21-ம் நூற்றாண்டின் அரசியலுக்கு விஜய் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
News August 22, 2025
வெறிநாய்களை வெளியே விடக்கூடாது: SC

தெருநாய்களை பிடித்தாலும் அவற்றுக்கு கருத்தடை & புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திவிட்டு, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விட்டுவிட வேண்டும் என SC <<17481254>>தீர்ப்பளித்துள்ளது<<>>. அதேநேரம், ரேபிஸ் தொற்று பாதித்த நாய்களையும், வெறிப்பிடித்த நாய்களையும் தெருவில் விடவும் தடை விதித்துள்ளது. தெருநாய்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் ஆலோசித்து தேசியக் கொள்கை உருவாக்கவும் மத்திய அரசை SC வலியுறுத்தியுள்ளது.