News February 28, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>-1 என்ற <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 1, 2026

இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (28.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

News February 28, 2026

சிவகங்கை: 12 ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில், வரும் 2.3.2026 அன்று நடைபெறவுள்ள மார்ச் 2025-26 ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை, மாவட்டத்தைச் சார்ந்த மொத்தம் 16,154 பள்ளி மாணாக்கர்களும், 425 தனித்தேர்வர்களும் எழுதவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

சிவகங்கை: விமான பணியாளர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சியினை பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!