News May 13, 2024
செங்கல்பட்டு: மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
செங்கல்பட்டு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News March 10, 2026
கனரக லாரி மோதி தாயி, மகள் பலி

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் இன்று (மார்ச்.10) காலை தனது மகள் இனியாவை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த செங்கல் ஏற்றிய கனரக லாரி மோதி சம்பவ இடத்திலேயே தாயும், மகளும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2026
செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு இன்று ( மார்ச்-10) வெளியிட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் கூகுள் மேப் இடத்தை லைக் செய்து போட்டோ எடுத்து அனுப்பினால் ரூபாய் 150 அனுப்பி நம்ப வைத்து பின்னர் எங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக பெறலாம் என தெரிவித்து அதிக அளவு பணத்தை ஏமாற்றி திருடும் சைபர் களின் குற்றங்கள் நடைபெறுகின்றன. இவற்றை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் புகார் தெரிவிக்க ☎️1930


