News February 28, 2026

தி.மலை: பெண்ணை அடித்து உதைத்து கொடூரம்

image

செய்யாறு; பில்லாந்தி ஊராட்சி தேவானத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சட்ட வழியில் போராடி வருபவர் கல்பனா. இவரை, ஆக்கிரமிப்பாளர்களான குமாரி, கீதா, ஏழுமலை, முருகன் ஆகியோர் கட்டை மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த கல்பனா மீட்கப்பட்டு, தற்போது ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News March 1, 2026

ஆரணியில் அதிரடி கைது

image

ஆரணி அருகே ஆரணி–வேலூர் சாலையில் ஜெயலட்சுமி(45) என்பவரிடம் 7 சவரன் தங்க நகையை டூவீலரில் வந்த இருவர் பறித்து சென்றனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (26), மதன் குமார் (30) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News March 1, 2026

அறிவித்தார் தி.மலை கலெக்டர்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் ராணிப்பேட்டை, கோவையில் அழகு கலை பயிற்சி வழங்கப்படுவதாக தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். இதில் 8ஆம் வகுப்பு முடித்த 18-35 வயது உடையவர்கள் பங்கேற்கலாம். தங்கும் இடம், உணவு உள்ளிட்ட செலவுகளை தாட்கோவே ஏற்கும். பயிற்சி காலம் 90 நாட்கள். ரூ.18,000- 25,000 சம்பளத்தில் வேலை. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 1, 2026

தி.மலை: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்கள் பகுதியில் ஏதேனும் அவசரப் பிரச்சனைகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், உடனடியாக அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவசரத் தேவைகளுக்கு 100 என்ற எண்ணை டயல் செய்து காவல்துறை உதவியைப் பெறலாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!