News February 28, 2026
தூத்துக்குடி: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

ஓட்டப்பிடாரம் அருகே தெற்குபரும்பூரை சேர்ந்த மாடசாமி. இவர் ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முனியசாமி தந்தையிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளார் இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் முனியசாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டி உள்ளார். இதனால் ஓட்டப்பிடாரம் போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News March 2, 2026
தூத்துக்குடி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 2, 2026
தூத்துக்குடி: டிகிரி போதும்… ரூ.1.20,940 சம்பளத்தில் வேலை ரெடி

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <
News March 2, 2026
திருச்செந்தூர் மக்கள் கவனத்திற்கு…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நற்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, இதில் உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


