News February 28, 2026

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பிப்-(27) இரவு 10 மணி முதல் பிப்- (28)காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News

News March 1, 2026

விழுப்புரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

விழுப்புரம்: பாஜக – திமுக வினரிடையே மோதல்

image

திருவெண்ணைநல்லூர் அருகே மேலமங்கலம் கிராமத்தில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசியவர் திமுகவைப் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதில் திமுகவைச் சேர்ந்த சிலர் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதனால் திமுக பாஜக இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 1, 2026

விழுப்புரம்: ரயில் மோதி லாரி ஓட்டுநர் பலி

image

விக்கிரவாண்டி அருகே வா.பகண்டை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் (48), சனிக்கிழமை குடும்பத்துடன் கோயில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். முண்டியம்பாக்கம் ரயில்வே கேட் அருகே இயற்கை உபாதைக்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, சென்னை – மதுரை வைகை அதிவிரைவு ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!