News February 27, 2026
தமிழக தேர்தல்: தலைமை ஆணையர் அறிவித்தார்

சென்னையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, <<19252265>>CEC ஞானேஷ் குமார்<<>> தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, *வாக்குச்சாவடிக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. *2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பதிவேற்றப்படும். *வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும். *கடைசி 2 சுற்றுகள் இருக்கும்போதே தபால் வாக்குகள் எண்ணப்படும். SHARE IT
Similar News
News February 27, 2026
விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? பிப்ரவரி மாத சிறப்பு சலுகைகள் முடிவடைய உள்ளன. <<19182957>>டாடா<<>>, <<19187177>>மாருதி<<>>, <<19166383>>ஹுண்டாய்<<>>, <<19101460>>ஹோண்டா<<>>, <<19114006>>ரெனால்ட்<<>> உள்ளிட்ட கார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ₹45,000 முதல் அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.
News February 27, 2026
குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை: அன்புமணி

கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி கூறியுள்ளார். இதில், திமுக நிர்வாகி கைதானதை X-ல் சுட்டிக்காட்டியுள்ள அவர், TN-ல் நடக்கும் பல குற்றங்களுக்கு திமுகவினரே காரணம் என சாடியுள்ளார். மேலும், குற்றங்களை தடுக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என பேசிய CM ஸ்டாலின், திமுகவினர் செய்யும் குற்றங்களை வேடிக்கை பார்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
News February 27, 2026
மார்ச் 28-ம் தேதி ஐபிஎல் தொடங்குமா?

2026 IPL வரும் மார்ச் 28-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, மார்ச் 26 தொடங்கும் என BCCI அறிவித்திருந்தது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு இதுவரை வராததால் தொடக்க தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இறுதிப் போட்டி மே 31-ம் தேதி நடைபெறலாம் என தகவல் வரும் நிலையில், இது குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.


