News May 13, 2024
கல்லூரிக்குச் சென்ற மகள் மாயம்

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தூளிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லு மகள் தமிழரசி என்கிற மனிஷா (19). இவர் மணப்பாறை நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நல்லு பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.
Similar News
News November 7, 2025
கரூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)
News November 7, 2025
கரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <
News November 7, 2025
கரூர்: தீக்குளித்த ஊழியர் பலி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புதுப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (39), பைனான்ஸ் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து மனவிரக்தியில் இருந்த அவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு உயிரிழந்தார். மனைவி சித்ராதேவி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


