News May 13, 2024
விருதுநகர்: இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 4, 2026
விருதுநகர்: சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி.!

ஏழாயிரம்பண்ணை அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி குருசாமி (வயது 86). இவர் சாத்தூருக்கு வந்திருந்த நிலையில், கிருஷ்ணன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 3, 2026
விருதுநகர்: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
News April 3, 2026
BREAKING சிவகாசி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அசோகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


