News May 13, 2024
தீவிர கண்காணிப்பில் காவல்துறை

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள சாலைப் பகுதியில் யாரும் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் நேற்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான நிலைகள் சாலையை கடந்து சென்றதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (08.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
மதுரை மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை மாநகர் கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிக்கான தூண்கள் அமைக்கும் பணியானது வைகை வடகரை சாலையில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, வருகின்ற 10.07.2025-ம் தேதி முதல் ஆழ்வார்புரம் இறக்கம், தேனி ஆனந்தம் சாலை சந்திப்பிலிருந்து குமரன் சாலை சந்திப்பு வரையுள்ள சாலையினை தற்காலிகமாக அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தகவல்.
News July 8, 2025
மீனாட்சி அம்மன் கோயில் வரலாற்றில் இன்று.!

1939-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி வைத்தியநாத ஐயர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கோயில்களில் நுழைய விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த புரட்சிகர நிகழ்வு 86வது ஆண்டை நிறைவு செய்து இன்றும் மதுரையில் நடைபெற்ற மாபெரும் புரட்சியாக கருதப்படுகிறது.