News February 27, 2026

1.5 அடி உயரம்.. சாதிக்கும் 10-ம் வகுப்பு மாணவி!

image

1.5 அடி உயரமே கொண்ட சிறுமி சுனிதா தனது மலையளவு தன்னம்பிக்கையால், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஒடிசாவை சேர்ந்த இவரால் கேட்கவும் பேசவும் முடியாது. வறுமையும் வாட்டியது. ஆனால், தனது குடும்பத்தினரின் உதவியுடன் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். அவர் சைகையில் கூறுவதை சகோதரன் எழுதி முடிக்கிறார். கல்விக்காக பல தடைகளையும் வெல்லும் இவரின் வாழ்க்கை பலருக்கு பாடமே!

Similar News

News February 28, 2026

இளையராஜா காலில் அடிக்கடி விழுந்த பார்த்திபன்

image

பாக்யராஜ் உடனான மோதலால், அவரது உதவியாளர்களுக்கும் இசையமைக்க மாட்டேன் என்று இளையராஜா கூறியதாக பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தானும், அப்போது உ.இயக்குநராக இருந்த பழனிசாமியும் மாறி மாறி இளையராஜா காலில் விழுந்தும், தனது முதல் படமான ’புதிய பாதை’-க்கு அவர் இசையமைக்கவில்லை என்று அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஆனால், பின்னாட்களில் அவரது சில படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

News February 28, 2026

விஜய் மனைவி சங்கீதா அடுத்த அதிரடி..

image

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நேற்றிலிருந்து விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில், சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், விவாகரத்து தொடர்பான செய்திகளை வெளியிட்டால் மனதளவில் பாதிக்கப்படுவேன். எனவே, இதுதொடர்பான செய்திகளை டிவி, நாளிதழ்கள், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

News February 28, 2026

OPS வந்ததும் திமுகவுக்கு வந்த நெருக்கடி

image

OPS உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தது பாசிடிவாக பார்க்கப்பட்டாலும், அதுவே நெருக்கடியாகவும் மாறியுள்ளது. ஏற்கெனவே கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருகின்றன. அதேநேரம் திமுகவில் இணைந்துள்ள OPS, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், அன்வார் ராஜா, மைத்ரேயன், ஐயப்பன் உள்ளிட்டோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், சீட்டை எதிர்பார்த்திருக்கும் திமுகவினர் அதிருப்தியடைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!