News February 27, 2026

சேலத்தில் குவிக்கப்படும் போலீஸ்!

image

சேலம் பொன்னம்மாபேட்டை இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனப் புதிய கட்டடத்தைத் திறக்க, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வருகிறார். காலை 10.25-க்கு காமலாபுரம் வரும் அவருக்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு இன்று சேலத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா முடிந்ததும் அவர் டெல்லி புறப்படுகிறார்.

Similar News

News February 28, 2026

சேலம் வடக்கு தொகுதியில் ராஜேந்திரன் மீண்டும் போட்டி?

image

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில், சேலம் வடக்கு தொகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிட வேண்டி இன்று (பிப்ரவரி 28) திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சேலம் மேயர் ராமச்சந்திரன் விருப்ப மனுவை வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். தற்போது விண்ணப்பித்திருக்கும் தொகுதியில் அமைச்சர் இரு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

News February 28, 2026

சேலம்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, சேலம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News February 28, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!