News February 27, 2026
விழுப்புரத்தில் பெண் பரிதாப பலி!

திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்தவர் விஜயலட்சுமி (46). சற்று மனநலன் பாதிக்கப்பட்ட இவா், மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரைகளை உட்கொண்டு வந்தாா். இந்நிலையில், கடந்த 23ம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு விஜயலட்சுமி மயங்கியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வளத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களுக்கு பரிசோதனைகள்

மேல்மலையனூர் வட்டம் வளத்தி பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவிகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் செஞ்சி எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தான் இன்று (மார்ச்.04) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.