News February 27, 2026

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்

image

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம். பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலிபான்கள் எல்லையில் உள்ள 15 சோதனை சாவடிகளை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல் 40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். நடந்து வரும் எல்லை மோதல்கள் இருநாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

Similar News

News February 28, 2026

வாயு தொல்லையா? இந்த பழங்களை தவிர்க்கவும்

image

நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லை உள்ளவர்கள் சில பழங்களை அடிக்கடி சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, மாங்காய், புளிப்பு திராட்சை ஆகியவை அமிலத்தன்மை அதிகம் கொண்டதால், வயிறு பிரச்னை உள்ளவர்கள் அளவாக உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பழங்களில் உள்ள அமிலத்தன்மை வாயு & நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். தொடர்ந்து வாயு தொல்லை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

News February 28, 2026

முந்திரி தொண்டையில் சிக்கி குழந்தை மரணம்

image

முந்திரி தொண்டையில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்திரியை சாப்பிட்டபோது ஒரு முந்திரி தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் குழந்தை உயிரிழந்தது. குழந்தைகளுக்கு முழு பிஸ்கட், முழு நட்ஸ் கொடுப்பதை தவிர்க்கவும்.

News February 28, 2026

ரத்தன் டாடா பொன்மொழிகள்

image

*வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கும். *வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட. *எவ்வளவு சிறிய முன்னேற்றமாக இருந்தாலும், முன்னேற்றம் முக்கியமானது. *எதிர்காலம் நாம் நுழையும் ஒன்று அல்ல. எதிர்காலம் நாம் உருவாக்கும் ஒன்று. *புதுமை என்பதுதான் போட்டியிலிருந்து வேறுபட்டு, முன்னேற ஒரே வழி.

error: Content is protected !!