News February 27, 2026
தி.மலை: ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் செல்லும் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (பிப்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2026
தி.மலையில் ஒருமுறை கூட ஜெயிக்காத அதிமுக!

தி.மலை சட்டமன்ற தொகுதியில், இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் 9 முறை தி.மு.க-வும், 6 முறை காங்கிரசும், சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அதிமுக ஒருமுறை கூட இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. திமுக கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ். தணிகைவேலை விட 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
News February 28, 2026
தி.மலை: லஞ்சம் பெற்ற நில அளவையர் அதிரடி கைது

போளூர் தாலுகா அலுவலகத்தில் டவுன் நில அளவையராக பணியாற்றி வரும் சக்திவேல் நேற்று (பிப். 27) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் பகுதியை சேந்த சின்னராசு என்பவர், தனது பாகப்பிரிவினை செய்யப்பட்ட வீட்டை அளக்க அணுகியபோது சக்திவேல் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அவரை கைது செய்தனர்.
News February 28, 2026
தி.மலை: பெண்ணை அடித்து உதைத்து கொடூரம்

செய்யாறு; பில்லாந்தி ஊராட்சி தேவானத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சட்ட வழியில் போராடி வருபவர் கல்பனா. இவரை, ஆக்கிரமிப்பாளர்களான குமாரி, கீதா, ஏழுமலை, முருகன் ஆகியோர் கட்டை மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த கல்பனா மீட்கப்பட்டு, தற்போது ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


