News February 27, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (பிப்-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 1, 2026
‘திராவிட சூரியனே!’ – முதல்வருக்கு ஆர்.காந்தி உத்வேக வாழ்த்து

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை (மார்ச்.1) முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். “திராவிட சூரியனே!” எனப் புகழ்ந்துரைத்த அவர், முதல்வர் மக்கள் நலன் கருதி நீண்ட காலம் சேவை செய்ய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார். கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாகத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
News March 1, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் <
News March 1, 2026
ராணிப்பேட்டை: வீரர்களின் துரித செயலால் உயிர் தப்பிய குடும்பம்!

தக்கோலம் மூலத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது வீட்டில் இன்று பிப்ரவரி.28ம் தேதி காஸ் கசிவின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து, மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதனால் உயிர் சேதம் ஏதுமில்லை. இதனை தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


