News February 27, 2026
RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Similar News
News March 11, 2026
ஆவடி வருகிறார் சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சியின் ஆவடி தொகுதி வேட்பாளர் அறிமுகம் பொதுக் கூட்டம் வரும் மார்ச் 13ஆம் தேதி ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலையம் அருகே நடைபெற உள்ளது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிைைணப்பாளர் சா.பாத்திமா பர்ஹானா கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News March 11, 2026
ஆவடி அருகே கணவரை படுகொலை செய்த இளம்பெண்!

திருவள்ளூர்: ஆவடி, கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39), மனைவி மகேஸ்வரி(29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் போதையில் வந்த அவர் மகேஸ்வரியின் தாலியை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்தவர், அருகே இருந்த கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில், ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மகேஸ்வரியை கைது செய்த போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
News March 11, 2026
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


