News May 13, 2024
தேர்வில் தவறியவர்களுக்கு இன்று முதல் சிறப்பு வகுப்பு

நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி கூறுகையில், 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்வில் தவறிய, பள்ளிக்கு பாதியில் வராமல் சென்ற மாணவ மாணவிகளை வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதனை தொடர்ந்து வரவிருக்கும் துணை தேர்வில் அவர்களை பங்கேற்க வைத்து படிப்பை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் அதற்கான வகுப்பு தொடங்கப்படும் என நேற்று தெரிவித்தார்.
Similar News
News November 11, 2025
நெல்லை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

நெல்லை மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <
News November 11, 2025
கங்கை கொண்டான் ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை அருகே கங்கைகொண்டான் – கைலாசபுரம் இடையேயான 7-வது ரயில்வே கேட், தண்டவாளம் புதுப்பிக்கும் பணிக்காக இன்று (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. பொதுமக்கள் மாற்று வழியைப பயன்படுத்தும்படி நெல்லை ரயில்வே பொறியியல் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
News November 11, 2025
நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி மகள் உடல் நல குறைவால் கடந்த ஆண்டு அம்பையில் உயிரிழந்தார். இதனால் தீராத சோகத்தில் ஒராண்டாக வசித்து வந்த அமுதவள்ளி நேற்று அதிகாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


