News February 26, 2026

தருமபுரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

நல்லம்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நேற்று முன் தினம் இரவு செல்ஃபி பாலத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 27, 2026

தருமபுரியில் தூக்கில் தொங்கிய பெண்

image

தருமபுரியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி சுந்தரி(31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனவேதனையில் இருந்த சுந்தரி தனது சகோதரரை செல்போனில் அழைத்து தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனே வீட்டிற்கு விரைந்தனர். அப்போது, சுந்தரி தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 27, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் பிப்ரவரி 26, இரவு முதல் காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!