News February 26, 2026

அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. வழக்கில் தொடர்புடைய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மதுரை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், அவருடன் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் உள்ளிட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 2, 2026

தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கில் தீர்ப்பு!

image

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் வரும் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2020-ல் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைதான நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வர உள்ளது.

News March 2, 2026

தவெக + காங்கிரஸ் கூட்டணி.. கடைசி நேரத்தில் திருப்பம்

image

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால், திமுக கூட்டணியில் இருந்து விலக காங்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் 35 தொகுதிகளை காங்., கேட்கும் நிலையில், 25 தொகுதிகளையே வழங்க திமுக முன்வந்துள்ளதாம். இதனிடையே, ஹைதராபாத்தில் <<19279246>>ராகுலுடன் ஆதவ் அர்ஜூனா<<>> பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தமிழக தேர்தல் களத்தில் கடைசி நேர திருப்பமாக அமைந்துள்ளது.

News March 2, 2026

பொடுகு தொல்லையா? ஈசி தீர்வு இருக்கு

image

மக்களே, பொடுகு தொல்லை இருந்தால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். இதை எண்ணி இனி கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்னையை தீர்க்க, எலுமிச்சையும் தேனும் போதும். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையுமாம். Try பண்ணி பாருங்க. அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!