News February 26, 2026
புதிய ரேஷன் கார்டுகள்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

TN-ல் 2021 முதல் தற்போது வரை 21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல், கள்ளிமந்தையத்தில் பேசிய அவர், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். முன்னதாக, 2025 டிசம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு Smart Card வழங்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
Similar News
News February 27, 2026
OPS அமைதிப்படை சத்யராஜ் போன்றவர்: RB உதயக்குமார்

திமுகவில் OPS-க்கு கிடைக்கும் பதவி, துரோகத்திற்காக கிடைத்த பரிசு என RB உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுகவின் பொய் வழக்கில்தான் ஜெயலலிதாவின் உயிர்போனதாக தெரிவித்த அவர், அந்த சமயத்தில், CM பதவிக்காக திமுகவின் உளவாளியாக OPS இருந்திருப்பாரோ என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், அமைதிப்படை சத்யராஜ் போல் OPS எங்கே யாருக்கு ஆப்பு வைப்பார் என யாருக்கும் தெரியாது எனவும் சாடியுள்ளார்.
News February 27, 2026
நகைக் கடன்.. மகிழ்ச்சியான செய்தி

நகைக் கடன் தேவைப்படுபவர்களுக்கு இந்தியன் வங்கி மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்குகிறது. இந்தியன் வங்கி மட்டுமே நகையின் மதிப்பில் 85% அளவுக்கு கடன் வழங்கும் பொதுத்துறை வங்கியாகும். இதனால், அதிக மக்கள் அந்த வங்கியின் கிளைகளில் நகைக் கடன் பெற்று வருகின்றனர். மேலும், விவசாய நகைக் கடன்களுக்கு 7% மட்டுமே வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் இந்தியன் வங்கியில் நகைக் கடன் வாங்கி உள்ளீர்கள்?
News February 27, 2026
அதிமுகவை கிளை கழகமாக மாற்றிய பாஜக: CM ஸ்டாலின்

வளர்ச்சி என்றாலே பிடிக்காத கட்சியாக பாஜக இருந்து வருவதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பதால் அதிமுகவை தனது கிளைக் கழகமாக மாற்றி TN-ல் நுழைய பாஜக முயற்சிப்பதாகவும், அதிமுக அரசு ஊழல் நிறைந்தது என பேசியது இப்போது அமித்ஷாவுக்கு நினைவில் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்காக கூட TN-க்கு எந்த சிறப்பு திட்டங்களையும் பாஜக அறிவிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.


