News February 26, 2026
கரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை! இன்றே கடைசி

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026 (இன்றே கடைசி)
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News February 27, 2026
கரூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கரூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க
News February 27, 2026
புதிய துணை மின் நிலையம்: CM ஸ்டாலின் திறந்து வைத்தார்!

குளித்தலை அருகே நெய்தலூர் பஞ்சாயத்து, சின்னபனையூரில் ரூ. 9.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இப்புதிய மின் நிலையம் மூலம் அப்பகுதி மக்களின் மின் தேவை பூர்த்தியாகும்.
News February 26, 2026
கட்டுப்பாட்டை இழந்த லாரியால் விபத்து

கரூர் சுக்காலியூர் மதுரை பைபாஸ் சாலையில் இன்று மதியம் கண்டெய்னர் லாரி மீது மோதாமல் இருக்க முயன்ற கனரக லாரி, கட்டுப்பாட்டை இழந்து உயர்மின் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.


