News February 26, 2026

கடலூர்: தலை துண்டிக்கப்பட்டு கிடந்த இளைஞர்

image

குமராட்சி பகுதியில் உள்ள உப்பனாற்றில் நேற்று 35 வயது வாலிபர் ஒருவர் தலை மற்றும் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த குமராட்சி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிந்து இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.

Similar News

News February 28, 2026

கடலூர்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

கடலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது<> https://pgportal.gov.in<<>>/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது வழக்கு

image

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மகாராஜா(28). இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது, அங்கிருந்த டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் மகாராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 28, 2026

கடலூர்: திமுக – அதிமுக நிர்வாகிகள் மோதல்

image

சிதம்பரம் அடுத்த கண்ணங்குடியை சேர்ந்தவர் கண்ணன்(46). திமுக கிளை செயலாளரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் குமரேசனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விரோதம் காரணமாக இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் இருதரப்பை சேர்ந்த கண்ணன், குமரேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!