News February 26, 2026

புதுவை: எஸ்ஐ பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

image

புதுவை காவல்துறையில் 70 எஸ்.ஐ. பணிக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி கூடத்தில் மார்ச் 4-ம் தேதி நடக்கிறது. தேர்வானவர்கள் தங்களின் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என புதுவை காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை அறிவித்துள்ளார்.

Similar News

News March 1, 2026

புதுச்சேரி: பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

image

புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், விழா மேடையிலேயே பிரதமர் மோடியை சந்தித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரி நிர்வாக அதிகாரங்களில் பல கட்டுப்பாடுகள் இருப்பதால், மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த மாநில அந்தஸ்து அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

News March 1, 2026

புதுச்சேரி: மோடி வருகையையொட்டி காங்கிரஸ் தலைவி கைது

image

பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கருப்புக்கொடி காட்டப்போவதாக வீடியோ வெளியிட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதலியார்பேட்டை காவல்துறையினர் இன்று காலை அவரது இல்லத்திற்குச் சென்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

News March 1, 2026

புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏ மரணம்

image

புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நாராயணசாமி (74), மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2006 தேர்தலில் காங்கிரஸில் சீட் கிடைக்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வில்லியனூர் தொகுதி எம்எல்ஏ-வாகவும், அரசு சாராய ஆலை தலைவராகவும் பணியாற்றினார்.

error: Content is protected !!