News February 26, 2026
புதுக்கோட்டை: பைக் மீது மோதிய சரக்கு வாகனம் – ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் நீர்பழனி, கருதாங்கீப்பட்டியை சேர்ந்தவர் கோபால்(42). இவர் கீரனூர் – திருச்சி புறவழிச்சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலே கோபால் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய மாத்தினாம்பட்டியை சேர்ந்த கணேசன்(26) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
புதுகை: சாலையை கடக்க முயன்றதால் விபரீதம்

புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் நேற்று விக்னேஸ்வரன் (21) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஹரிஹரன் என்பவர் அப்பகுதியில் நடந்து வந்தார், அப்போது திடீரென பைக்கின் குறுக்கே சாலையை கடக்க முயன்றதால், பைக்கில் வந்த விக்னேஸ்வரன் பைக்கில் இருந்து விழுந்து படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவினரின் புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 1, 2026
புதுகை: சட்டவிரோத மது விற்பனை – ஒருவர் கைது

அன்னவாசல், சீகம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக, அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அன்னவாசல் போலீசார் சீகம்பட்டி உப்புபாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட விளாப்பட்டியை சேர்ந்த கதிரேசன் (26) என்பவரை, போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News March 1, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


