News February 26, 2026

தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்றும் (பிப்.26) 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,339) அதிகரித்து $5,183-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று உயர வாய்ப்புள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ், $1.49 உயர்ந்து $88.96 ஆக உள்ளது.

Similar News

News March 1, 2026

வருமான உச்சவரம்பை ₹8,000 ஆக உயர்த்தினார் CM ஸ்டாலின்

image

அரசுப் பணியில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய 30% இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கென 10% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பு ₹4,000-லிருந்து ₹8,000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேநேரம், கணவரை இழந்தவர்கள் மட்டுமே இப்பிரிவில் வருவார்கள். விவாகரத்து பெற்றவர்கள் இதன் கீழ் சலுகை கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 1, 2026

இந்திய பூர்வீகம் கொண்ட கமேனி.. எப்படி தெரியுமா?

image

தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள ஈரான் உயர் தலைவர் கமேனியின் குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. அவரது தாத்தா சையது அகமது முசாவி உ.பி.,யின் பாரபங்கி அருகே கிண்டூர் என்ற கிராமத்தில் பிறந்துள்ளார். பிறகு, ஈராக் சென்ற அவர், அதனை தொடர்ந்து ஈரானில் குடியேறியுள்ளார். முசாவியின் மூலம் அரசியலில் ஆர்வம் கொண்ட கமேனி 1970-களில் இஸ்லாமிய புரட்சி படைக்கு தலைமை தாங்கி ஈரானின் உயர் தலைவரானார்.

News March 1, 2026

விஜய் விவகாரம்.. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

image

விஜய் – சங்கீதா விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது என்று அண்ணாமலை, குஷ்பு ஆகியோர் கூறியுள்ளனர். இதே நிலைப்பாட்டையே கார்த்தி சிதம்பரம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் தெரிவித்திருந்தனர். அதேநேரம், இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் மீம்ஸ்கள் இணையத்தை சுழன்றடிக்கின்றன. அதில் சிலர், இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னை என கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!