News February 26, 2026
ஸ்ரீரங்கம்: ரூ.76 லட்சம் உண்டியல் காணிக்கை

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (பிப்.25) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. அப்போது ரூ.76,43,837 ரொக்கம், தங்கம் 58.100 கிராம், வெள்ளி 835 கிராம் மற்றும் 264 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் கிடைக்கப்பெற்றதாக கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <


