News May 13, 2024

சென்னை: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

image

சென்னை, புழுதிவாக்கம் 186 ஆவது வார்டு பாலாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை, வீராங்கல் ஓடையில் இணைப்பது தொடர்பாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் 186 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் கலந்துகொண்டார்.

Similar News

News August 24, 2025

சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்

image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 75 இடங்களில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு கருவிகளை பொருத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ‘IoT-based environmental sensors’ என்ற கருவி மூலம், வெப்பம், ஈரப்பதம், மாசு அளவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவிலேயே இத்தகைய கருவிகள் பொருத்தும் முதல் நகரமாக சென்னை மாறும் என கூறப்படுகிறது.

News August 24, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 23, 2025

சென்னை: வரலாற்றில் இன்று L.I.C. கட்டிடம்

image

இந்தியாவின் முதல் உயரமான கட்டிடமாக சென்னையின் புகழ்பெற்ற L.I.C. கட்டிடம் ஆகஸ்ட் 23, 1959 அன்று திறக்கப்பட்டது. 1953-ல் கட்டுமானப்பணி துவங்கி 1959-ல் நிறைவடைந்த இக்கட்டிடம் சுமார் 177 அடி உயரம், 14 மாடிகள் கொண்டது. அன்றைய காலத் திரைப்படங்களில் இதன் அபூர்வமான வடிவம் பெரும் கவனத்தை பெற்றது. சென்னை வந்தவர்கள் அனைவரும் இதைப் பார்க்காமல் செல்ல முடியாது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!