News February 26, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (25.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 1, 2026
மதுரை: ரயில் பயணிகளுக்கு இது தேவை!

தமிழில் தகவல் பெற;
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 1, 2026
மதுரை: ரூ.4,400 கோடியிலான திட்டங்கள் துவக்கம்

மதுரைக்கு இன்று வரும் பிரதமர் மோடி ரூ.4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 8 ரயில் நிலையங்களை (பொள்ளாச்சி, காரைக்குடி, திருவாரூர் உள்ளிட்ட) காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். என்எச் 332ஏ ( மரக்காணம் – புதுச்சேரி) மற்றும் என்எச்-87 (பரமக்குடி – ராமநாதபுரம்) ஆகிய சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டுகிறார்.
News March 1, 2026
மதுரை: கண்மாயில் சிறுவனின் சடலம்

மதுரை திருமால்புரம் மருதங்குளத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் மகன் சஞ்சய் (11). இவர் 6 ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களுடன் மருதங்குளம் கண்மாய்க்கு நேற்று குளிக்க சென்றார். சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


