News February 25, 2026
நெல்லையில் சிறுமியை கடத்திய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் கொடுமை செய்த வழக்கு சேரன்மாதேவி காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்தது. இதில் சுமேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று மகிளா நீதிமன்றம் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் சிறுமிக்கு நிவாரண நிதியாக 5 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்
Similar News
News February 28, 2026
திருநெல்வேலி தொகுதியில் அறிவிப்புக்கு முன்னே பிரச்சாரம்

சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, பாஜகவினரால் “நயினார் நாகேந்திரன்—தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உருவாகியுள்ளது.
News February 28, 2026
நெல்லை: காதல் மனைவியை கொலை செய்த கணவர் கைது

பாளை, கீழநத்தம் கிருபா நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சதீஷ் தனது காதல் மனைவி தமிழ்ச்செல்வியோடு ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்து தமிழ்ச்செல்வியை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த பாளை தாலுகா காவல் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த காதல் கணவர் சதீஷை நேற்று கைது செய்தனர்.
News February 28, 2026
நெல்லையப்பர் தெப்ப திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மாசி மக அப்பர் தெப்பத் திருவிழா வருகிற 2ம் தேதி இரவு ஏழு மணிக்கு நடைபெறும் என கோவில் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் இரவு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள பொற்தாமரை குளத்தில் அப்பர் தெப்ப பவனி, நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அப்பருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும்.


