News February 25, 2026

நல்லகண்ணுவின் மீசையை கையால் பிடுங்கி சித்ரவதை

image

தான் சாகும் வரை நல்லகண்ணு மீசை வளர்க்கவில்லை. 1948-ல் CPI தடைசெய்யப்பட்ட போது, தலைமறைவாக இருந்த நல்லகண்ணுவை தீவிரமாக போலீஸ் தேடிவந்தது. சுமார் ஓராண்டு கழித்து நல்லகண்ணு சிக்க, சிறையில் அவரை தலைகீழாக தொங்கவிட்டு மீசையிலிருந்த ஒவ்வொரு முடியையும் கைகளால் பிடுங்கி போலீஸ் சித்ரவதை செய்துள்ளது. அப்போது ’எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வரை மீசையே வளர்க்கமாட்டேன்’ என நல்லகண்ணு சபதமெடுத்திருந்தார்.

Similar News

News March 2, 2026

கடந்தாண்டை விட இந்தாண்டு வெயில் வாட்டி வதைக்கும்!

image

வாட்டி வதைக்கும் கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் வானிலை நிபுணர்களின் எச்சரிக்கை அதிர வைத்துள்ளது. இந்தாண்டு கோடைக்காலம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என்றும், ஜூன் முதல் படிப்படியாக பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை உயர்ந்து <<13058352>>அக்டோபரில் EL-NINO நோக்கி நகரும்<<>> என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் TN-ல் வெப்பத்தின் தாக்கம் மார்ச், ஏப்ரல் மாதங்களை விட மே, ஜூனில் உச்சம் தொடும் என கூறியுள்ளனர்.

News March 2, 2026

தாக்குதலில் கமேனியின் மனைவி மரணம்

image

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் உயர் தலைவர் கமேனியின் மனைவி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிப்.28-ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த கமேனியின் மனைவி மன்சூர் கோஜஸ்தே பாகர்சாதே கோமா நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது. 1964-ம் ஆண்டு தனது 17 வயதில் கமேனியை அவர் திருமணம் செய்துள்ளார்.

News March 2, 2026

LNG உற்பத்தியை நிறுத்திய கத்தார்.. விலை உயர வாய்ப்பு

image

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு(LNG) ஆலையான ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக LNG உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக கத்தார் எரிசக்தி துறை அறிவித்துள்ளது. உலகின் 20% LNG உற்பத்தி கத்தாரிடம் இருப்பதால், அதன் விலை சர்வதேச அளவில் உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!