News February 25, 2026

தஞ்சை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம்..!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News February 27, 2026

தஞ்சாவூர்: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

தஞ்சை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை தஞ்சை மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8012232577) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 27, 2026

தஞ்சை பெரிய கோயிலில் திரை பிரபலங்கள்!

image

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை நாடுகளான கேரளா, கர்நாடக மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நடிகர் ஆதி தனது மனைவியும் நடிகையுமான நிக்கி கல்ராணியுடன் நேற்று (பிப்.26) தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.

error: Content is protected !!