News May 13, 2024
என் அமைதிக்கு இதுதான் காரணம்!

ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்தும்போதும் சரி, ரன்களை குவிக்கும்போதும் சரி KKR வீரர் சுனில் நரைன் மற்ற வீரர்களை போல உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. இதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் கூறிய நரைன், “விளையாட்டில் தோல்வியுற்றவரின் மனதைக் காயப்படுத்தும் வகையில், வெற்றியைக் கொண்டாடக் கூடாது என்று என் தந்தை கூறியிருக்கிறார். அதனால்தான் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டேன்” என்றார்.
Similar News
News November 19, 2025
வரலாற்றில் இன்று

1917 – முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள்
1946 – ஆப்கானித்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன
1961 – நடிகர் விவேக் பிறந்தநாள்
1976 – நடிகர் அருண் விஜய் பிறந்த தினம்
1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது
2008 – நடிகர் எம். என். நம்பியார் மறைந்தநாள்
News November 19, 2025
SIR பணியால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களா BLO?

TN உட்பட பல்வேறு மாநிலங்களில், SIR பணிகளில் பூத் லெவல் ஆபிசர் எனும் BLO-கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் இந்த பணியில் ஈடுபட்டுள்ள BLO-களும் வேலை அழுத்தம் பல மடங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கேரளா, ராஜஸ்தானை சேர்ந்த 2 அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறுகிய நேரத்தில் SIR பணிகளை முடிக்க ECI திட்டமிட்டுள்ளதே இதற்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 19, 2025
வயிறு முட்ட சாப்பிடும் ஆளா நீங்க? அப்போ இது முக்கியம்

சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அந்த உணவானது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் இரவில் தூக்கம் வருவதும் கடினம். இதற்கு ஒரே தீர்வு ஒரு கிளாஸ் சூடான நீர்தான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாதாம். சிறிது இடைவெளி விட்டு குடித்தால் செரிமானம் இலகுவாக இருக்குமாம். மூக்கு முட்ட சாப்பிடும் உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க.


