News February 25, 2026
கடலூர்: மனமகிழ் மன்றத்தை திறந்து வைத்த எஸ்பி!

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில், புதிதாக மனமகிழ் மன்றம அமைக்கப்பட்டது. அதனை இன்று(பிப்.25) கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார். இம்மன்றத்தில் காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர், சிறுவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், பொது அறிவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் TNPSC தேர்வு சம்பந்தமாக புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
Similar News
News February 26, 2026
கடலூர்: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 26, 2026
கடலூர் மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

கடலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
News February 26, 2026
கடலூர் மாவட்டத்தில் மீன் பிடி குத்தகை ஏலம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்திலுள்ள 23 ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக நாளை முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குநரால் வரவேற்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


