News February 25, 2026

நல்லகண்ணு கடந்து வந்த பாதை

image

நல்லகண்ணு 26.12.1925 அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த அவருக்கு பலவேசம் என்ற ஆசிரியர் பொதுவுடமை கருத்துக்களை அறிமுகம் செய்தார். பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக இருந்த நல்லகண்ணு, 1943-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கட்சியில் பயணம் செய்தவர்.

Similar News

News March 13, 2026

விஜய்க்கு எதிராக நடிகர்களை களமிறக்கும் திமுக

image

திமுக மேடைகளில் விஜய்க்கு எதிராக நடிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். வடிவேலுவை தொடர்ந்து தற்போது நடிகர் நாசர், பிரபலமாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து கட்சி ஆரம்பிக்கிறார்கள் என விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், திட்டங்களை பட்டியலிட்டு சொல்வதல்ல கட்சி, தனியாக கொள்கை இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், படங்களின் பட்டியலை வைத்து நான் அரசமைப்பேன் என்று சொல்வது தேவையற்றது என்றார்.

News March 13, 2026

சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் ₹2,000

image

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்கப்படவுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி திட்டத்தின் 22-வது தவணையாக ₹18,640 கோடி வெளியிடுகிறார். இதற்கு விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

News March 13, 2026

MP-க்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: தமிழிசை

image

MP கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு TN அரசின் பதில் என்ன என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதே சம்பவம் வட இந்தியாவில் நடந்திருந்தால், இங்குள்ள 40 MP-யும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பார்கள் என்றும், ஆனால் சக MP-யின் அலுவலகம் தாக்கப்பட்டதற்காக எதுவும் பேசவில்லை எனவும் கூறினார். தமிழகத்தில் MP-க்கும் பாதுகாப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை எனவும் சாடினார்.

error: Content is protected !!