News February 25, 2026
வரியை 126% ஆக உயர்த்திய டிரம்ப்

இந்தியாவின் சோலார் பேனல்களுக்கு 126% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இதன் விலை USA-ல் இருமடங்காக உயரும். சோலார் உற்பத்திக்கு இந்திய அரசு நியாயமற்ற மானியங்கள் வழங்குவதால் US உற்பத்தியாளர்களை விட இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக லாபம் பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய பொருள்களுக்கு USA-ல் வரிகள் குறையும் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 27, 2026
விஜய் மனரீதியாக துன்புறுத்தினார்: சங்கீதா

ஒரே வீட்டிலேயே விஜய்யும் தானும் தனித்தனியாக வாழ்ந்துவந்ததாக மனைவி சங்கீதா மனுவில் கூறியுள்ளார். நடிகையுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, விஜய் மனரீதியாக துன்புறுத்தினார் என்ற அவர், நிதி கட்டுப்பாடுகளை விதித்து அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யின் பொதுவாழ்க்கைக்கு பங்கம் வரக்கூடாது என பரஸ்பர விவாகரத்து கோரியதாகவும், ஆனால் விஜய் அதற்கு உடன்பட மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 27, 2026
தமிழக தேர்தல்: தலைமை ஆணையர் அறிவித்தார்

சென்னையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, <<19252265>>CEC ஞானேஷ் குமார்<<>> தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, *வாக்குச்சாவடிக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. *2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பதிவேற்றப்படும். *வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும். *கடைசி 2 சுற்றுகள் இருக்கும்போதே தபால் வாக்குகள் எண்ணப்படும். SHARE IT
News February 27, 2026
‘விஜய்க்கும் நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு’

2021-ல் இருந்து நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாக மனைவி சங்கீதா விவாகரத்து மனுவில் தெரிவித்துள்ளார். முதலில் உறவை துண்டிப்பதாக விஜய் வாக்களித்தார் என்ற அவர், பிறகு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மீண்டும் அந்த உறவை தொடர்ந்ததாக கூறியுள்ளார். மேலும், குழந்தைகளின் நலனுக்காக இந்த விவகாரத்தை தள்ளிப்போட்டதாகவும், ஆனால் விஜய் தன்னை தனிமைப்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


