News February 25, 2026

புதுகை: விமான பாதுகாப்பு பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை, கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 18 முதல் 35 வயதுக்குள், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான <>www.tahdco.com<<>> விண்ணப்பிக்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News March 3, 2026

புதுக்கோட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

புதுக்கோட்டை: சாலையில் உயிரிழந்த புள்ளிமான்

image

விராலிமலை – மதுரை தேசிய நெடுஞ்சாலை யானைகள் வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே, புள்ளி மான் ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடக்கிறது. இறந்து கிடக்கும் புள்ளிமான் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததா, அல்லது சமூக விரோதிகள் யாராவது மானை தாக்கி இருக்கலாமோ என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. வனத்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலை தொடர்ந்து வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்துள்ளனர்.

News March 3, 2026

புதுகை மாவட்ட கலெக்டர் அதிரடி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் 34 பேர், பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் தொடர்பாக எவ்வித விடுப்பு விண்ணப்போமோ, மறுக்கடிதமோ மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!