News February 25, 2026
திருச்சி மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை!

சொத்து மோசடிகள் குறித்து திருச்சி காவல்துறை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. அதில் ஒரு நிலமோ அல்லது சொத்தோ வாங்கும் முன்
சொத்தின் முந்தைய உரிமையாளர் குறித்த ஆவணங்களை முழுமையாக சரிபார்க்கவும். வில்லங்கங்களை சொத்தின் மீதான கடன்கள், உரிமைகள், சட்ட மோதல்கள் போன்றவற்றை சரிபார்க்கவும். நில பயன்பாடு குடியிருப்பு நிலமா, வணிக பயன்பாட்டின் நிலமா, விவசாய நிலமா என்பதை சரிபார்க்க தெரிவித்துள்ளது.
Similar News
News February 27, 2026
திருச்சி: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

திருச்சி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 27, 2026
திருச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News February 27, 2026
திருச்சி: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களையும் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


