News February 25, 2026
கிருஷ்ணகிரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
Similar News
News March 11, 2026
கிருஷ்ணகிரிக்கு வருகிறார் துணை முதல்வர்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் (வெள்ளி) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். பையூர் மற்றும் பர்கூரில் கட்சி கொடியேற்றி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News March 11, 2026
கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் சிக்கிய 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி, லாலிக்கல் தொழிற்சாலையில் காவலாளிகளைத் தாக்கி, துப்பாக்கி மற்றும் காப்பர் ஒயர்களைக் கொள்ளையடித்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல், மாணிக்கம், முனிராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொம்மாண்டப்பள்ளி அருகே வாகனத் தணிக்கையில் பிடிபட்ட அவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கார் மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
News March 11, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


