News February 25, 2026

குமரி: டிகிரி போதும்.. ரூ.38,500 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 21-32 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.38,500 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<> கிளிக்<<>> செய்து மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE

Similar News

News March 1, 2026

நாகர்கோவில் அருகே கார் மோதி பெண் பலி

image

குமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது கார் ஒன்று இவர் மீது மோதியது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

குமரி: டெம்போ மோதி ஒருவர் பரிதாப பலி

image

குமரி, தக்கலை அருகே மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் ஜோஸ் (45). கொத்தனாரான இவர் ஆழ்வார்கோயிலில் இருந்து வட்டம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டெம்போ எட்வின் ஜோஸ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் நேற்று டெம்போ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

மண்டைக்காடு: மூன்று இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்

image

மண்டைக்காடு கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தர இருப்பதையொட்டி நடு ஊர் கரை, வெட்டுமடை, புதூர் ஆகிய இடங்களில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. 6 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், வேன் ஆகியவை லட்சுமிபுரம் ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!