News May 12, 2024
மாரத்தான் போட்டியில் பெரம்பலூர் வீரர்

கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கம், தி பெடரல் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் இணைந்து இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உலக செவிலியர் தினம் மற்றும் உலக அன்னையர் தினம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைசெல்வன் பங்கேற்று அசத்தி விழா குழுவினரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
Similar News
News September 3, 2025
பெரம்பலூர்: மின்வாரியத்தில் வேலை! ரூ.59,900 சம்பளம்!

பெரம்பலூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News September 3, 2025
பெரம்பலூர்: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

பெரம்பலூர் மக்களே! சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!
News September 3, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் (11.09.2025) அன்று ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதில் சிறுபான்மையின மக்களுக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளதாக கூறியுள்ளார்.